Supercourt Judgement for Higher PF Pension

saran_0411
EPF ஓய்வூதியம் தொடர்பாக. பணியாளர்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது... அதன்படி EPFல் சேர்ந்துள்ள அனைத்து பணியாளர்களும் குறைந்தது ரூபாய் 12 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளது... இதற்கு அனைத்து பணியாளர்களும், தாம் பணிபுரியும் சங்கத்தால் தீர்மானம் இயற்றி ஒரு படிவத்தில் பணியாளர்கள் அனைவரும் தனித்தனியாக கையொப்பமிட்டு EPF அலுவலகத்திற்கு 60 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்... அப்படிவத்தை பணியாளர்கள் அனைவரும் (தனித்தனியாக) பூர்த்தி செய்து சங்க தீர்மானத்துடன் விரைவில் அனுப்பி விடுங்கள்... உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளதால் இதற்கு மேல் மத்திய/ மாநில அரசுகளால் APPEAL செய்ய இயலாது... ஒரு குறிப்பிட்ட தொகையை சங்க பங்களிப்புடன் பணியாளர்களும் சேர்ந்து EPF அலுவலகத்திற்கு செலுத்த வேண்டும்... எனவே அனைத்து பணியாளர்களும் இதற்கு உடனடியாக தயாராகிக் கொள்ளுங்கள்... இனி அனைவரும் ரூபாய் பனிரெண்டாயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறலாம் என்ற நல்லதொரு செய்தி தெரிவிக்கப்படுகிறது...

[11/5, 7:33 PM] Sittha-cousin: வருங்கால வைப்பு நிதி பென்ஷன் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம் !


1, உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தமக்கு வழங்கி உள்ள 142 வது சட்ட பிரிவின் கீழ், தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சில புதிய விதிகளை வழங்கி உள்ளது.
2, 01.09.2014 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் தற்போது பணியில் இருப்பவர்கள், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தின்படி அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது !
3, EPS 2014 சட்டத்திருத்தம் செல்லுபடி ஆகும். உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை விதியில் இணைத்துக் கொள்ள வேண்டும் .
4, 01.09.2014 பிறகு சேர்ந்தவர்கள், பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்றால் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கி, ஆறு மாத காலத்திற்குள் சேர்த்து கொள்ளப்பட வேண்டும்.
4,01.09.2014 இக்கு முன் ஓய்வு பெற்றவர்கள், இச்சட்ட திருத்தத்தின் பெயரில் உரிமை கோர முடியாது. அவர்களுக்கு தற்போதுள்ள நிலையே தொடரும்.
5, 01.09.2014 பின் ஓய்வு பெற்றவர்கள், தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும்.
6, 01.09.2014 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெறுபவர்கள் கடைசி 60 மாத கால உதயத்தின் அடிப்படையில் பென்ஷன் தொகை நிர்ணயிக்கப்படும்.
7,தற்போதுள்ள பணியாளர்கள், நான்கு மாதங்களுக்குள் வருங்கால வைப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம்.
8,01-9-2014க்குப் பிறகு நாளைய தேதி வரை ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆறு மாதத்திற்குள் இத்திட்டத்திற்குள் சேரலாம்.
9, 01-9-2014 க்கு முன் ஓய்வு ஓய்வு பெற்று ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த ஊழியர்கள் 2014 திருத்தத்திற்கு முன் திட்டத்தின் 11(3) பிரிவின் கீழ் வருவார்கள். அவர்களுக்கு பழைய நிலையே தொடரும்
10, 01-9-2014 க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்கள், விருப்பத்தேர்வு இல்லாமல், அவர்கள் ஏற்கனவே திட்டத்திலிருந்து வெளியேறியதால், 2014 திருத்தப்பட்ட பலனையோ, உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பின் பலனை பெற இயலாது.

01.09.2014 க்கு ஓய்வு பெற்றவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும்.

மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நமது அகில இந்திய சங்கமான AIBEA, AICBEF மற்றும் நமது மாநில சங்கமான TNCBEA அதற்குரிய பணிகளை செய்யும்.


ஒட்டுமொத்தமாக பார்த்தால் 01.09.2014 க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும், தற்போது பணியில் உள்ளவர்களுக்கும் ஓரளவு நல்ல பலன்கள், இத்தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளது
1 Attachment(s) [Login To View]

If you are knowledgeable about any fact, resource or experience related to this topic - please add your views. For articles and copyrighted material please only cite the original source link. Each contribution will make this page a resource useful for everyone. Join To Contribute